சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?
சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிபதியிடம் நேரில் சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 8 அன்று சீமான் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சீமான் மீது அவதூறு வழக்கு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார். இதனையடுத்து, நீதிபதி விஜயா, வரும் மே 8, 2025 அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.