’அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் ஆக்குவதாக ஆதவ் ஆசை காட்டினார்’ சீமான் பகீர் பேட்டி!
ஆதவ் அர்ஜுனாவே தன்னை அழைத்து, அதிமுக கூட்டணிக்கு வருமாறு கேட்டதாகவும், துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளித்ததாகவும் சீமான் கூறினார்

’அதிமுக கூட்டணியில் துணை முதலமச்சர் ஆக்குவதாக ஆதவ் ஆசை காட்டினார்’ சீமான் பகீர் பேட்டி!
எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் வைரல் வீடியோ ஆன நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனம்
தவெக தேர்தல் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும், தவெக தேர்தல் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடியை யாரும் நம்பவில்லை என்றும், பாஜக தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்து 20% வாக்குகளைப் பெற்றதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.