Seeman: பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் இது தேவைப்படும்.. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்? - சீமான்!
Seeman : தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், அண்ணா, ஓமந்தூரார் போன்றவர்களெல்லாம் வியூக நிபுணர்களை வைத்துத் தான் அரசியல் செய்தார்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். பண கொழுப்பால் தவெக தலைவர் விஜய்யும், பிரசாந்த் கிஷோரும் ஒன்றிணைந்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் சீமானுக்கும் பாமகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலால் பாமகவினர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்தனர்.
சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி
அந்த புகாரின் பேரில் செய்யாறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு இன்று முதன்முறையாக வழக்கில் ஆஜராக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று வழக்கில் ஆஜரானார் சீமான். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
