’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்
"திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கொள்கை அளவில் என்ன வேறுபாடு உள்ளது? ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை, மலை கொள்ளை, முறையற்ற நிர்வாகம் போன்றவற்றில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். கொடிகள் மட்டுமே வேறு, கொள்கைகள் ஒன்றுதான்"

’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்
"அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள். பயம் இருக்கிறது; ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது," என சீமான் முதல்வரை விமர்சனம் செய்து உள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாற்று என்றால் புதிய தத்துவம், புதிய கோட்பாடு, ஒரு கருத்தியல் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாக ஓட்டுக்கு பணம், இலவச அறிவிப்புகள், சாராயம் வைப்பது போன்றவற்றை செய்கின்றன. இதில் என்ன மாற்று இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதாகவும், உண்மையான மாற்று என்பது கொள்கை அளவில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.