’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!
“பாஜக அரசு, சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் ஆதரவை இழந்தால், திமுக 22 உறுப்பினர்களுடன் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் திமுக இணக்கமாக இருக்கிறது”

’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!
எம்பிக்கள் எண்ணிக்கை காரணமாக திமுகவுடன் பாஜக இணக்கமாக செல்வதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பினார். "கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்தவர் இப்போது ஏன் செல்கிறார்? மாநிலத்திற்கு நிதி தரவில்லை, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என புலம்பியபோது பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தவில்லை. இப்போது அமலாக்கத்துறை (ED) சோதனைகளால் செல்கிறாரா என சந்தேகம் எழுகிறது," என்று சீமான் குற்றம் சாட்டினார்.