School Holiday: கனமழை எச்சரிக்கை ..இந்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி , நெல்லை உள்பட 4 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில
அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் நாளை (நவ.04) கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதேபோல் தென்காசி மாவட்டத்திற்கு அந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
வானிலை மையம் நாளை (04 /11/2023) சனிக்கிழமை அன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளதால் பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பள்ளிகளுக்கும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்