School Teacher: 17 வயது சிறுவனுடன் எஸ்கேப் ஆன 40 வயது டீச்சர்.. விசாரணையில் பகீர் - பின்னணி என்ன?
School Teacher: விருதுநகர் அருகே 17 வயது பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 40 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அருகே 17 வயது மாணவனை 40 வயதை சேர்ந்த தனியார் பள்ளியின் ஆசிரியை காதலித்தாக கூறப்படும் விவகாரத்தில் அவர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியையே இப்படி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். மந்திரஓடை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி முதல் தங்கள் மகனை காணவில்லை என்பதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து
அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனுடைய பெற்றோர் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து கடந்த 15 ஆம் தேதி கிளம்பிய மாணவர், கல்லூரியில் சேர உள்ளதாக கூறி கடிதம் எழுதி வைத்திருந்தார். கல்லூரியில் சேருவதற்கு எதற்காக கடிதம் எழுதி வைத்தார் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் மாணவன் படித்த தனியார் பள்ளியில் விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. அப்போதுதான் அதே பள்ளியில் 40 வயது கணிணி ஆசிரியையான பாத்திமா கனிக்கும் அந்த மாணவருக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளி நிர்வாகம் பாத்திமா கனியை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இதையடுத்து நிறைய விவகாரங்களில் ஆசிரியை மாணவனை அழைத்துக் கொண்டு சென்ற வழக்குகள் ஏராளம் என்பதால் போலீஸார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியை, புதுச்சேரியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரிக்கு விரைந்த போலீஸார் அந்த லாட்ஜில் இருந்து மாணவனை மீட்டு, ஆசிரியை பாத்திமாவை கைது செய்தனர். இதுகுறித்து பாத்திமா கனியிடம் விசாரணை நடத்திய போது மாணவனை புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காகவே அவரை அங்கு அழைத்து சென்றதாக அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார். எனினும் பெற்றோர் இருக்கும் போது உங்களுக்கு ஏன் அது குறித்து அக்கறை? அப்படியே ஆசிரியை என்ற முறையில் இருந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அழைத்து வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லூரி விவகாரங்களை பெற்றோருக்கு தெரிவித்து வழிகாட்டியிருக்க வேண்டும் என கூறிய போலீஸார், ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். ஆசிரியை பாத்திமா கனிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த சூழலில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்