தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  School Reopens: Following Tamil Nadu, Puducherry Also Postpones School Reopening To June 7-students Happy

School Reopens: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு–மாணவர்கள் மகிழ்ச்சி

Priyadarshini R HT Tamil
May 30, 2023 01:00 PM IST

School Reopens : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையாடுத்து மே 26ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம். கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன்.

ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள்.

சிங்கப்பூர், ஜப்பான் வெளிநாட்டு பயணங்களில் இருந்த முதலமைச்சர் ஃபோனில் தொடர்புகொண்டு பேசிவந்தோம். முதன்மை கல்வி அதிகாரிகளும் வெயில் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். அதன்படி முடிவு எடுக்கப்பட்டது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் இதுபோன்ற ஒரு கோரிக்கை எழுந்தது. தற்போது புதுச்சேரியிலும், ஜூன் 1ம் தேதிக்கு பதில் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அறிவிப்பு வெளியான பின்னர், அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் அதே நிலைதானே நிலவுகிறது என்று மாணவ, மாணவிகள் தங்களுக்கும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சிகரமானதாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்