தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  School Education: New Scheme For Dropouts - Govt Action Order

School Education : பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு புதிய திட்டம் - அரசு அதிரடி உத்தரவு

Priyadarshini R HT Tamil
Jun 02, 2023 10:38 AM IST

அரசுப் பள்ளிகளில் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் படிப்பைத் தொடரும் வகையில், ஜூன் மாதம் முழுவதும் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள், பள்ளிக் கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களை இனம்கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்வது அவசியம்.

இதைக்கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ‘தொடர்ந்து கற்போம்' என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24ம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், பள்ளி அளவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு, ஜூன் 1 முதல் 30 ஒரு மாத காலம் திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், குறைந்தபட்சக் கையேடுகளைப் பயன்படுத்தி, வாராந்திர தேர்வுகளை நடத்த வேண்டும். சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் அனைவரையும், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்