Thangam Thenarasu : 'பேர் வச்சீங்க சோறு வச்சீங்களா.. அதுக்கு 10 பைசா பணம் வந்ததா' பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
Thangam Thenarasu : பரபரப்பிற்காக எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் என விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Thangam Thenarasu : தமிழகத்தின் நிதி நிலை குறித்து தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வராக இருந்தவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பரபரப்பிற்காக எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் என விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சரியான நிதி மேலாண்மையை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த முயற்சிகளின் காரணமாகத்தான் வணிக வரிகளினுடைய சதவிகிதம் உயர்ந்து உள்ளது. குறிப்பாக 14% நமது வளர்ச்சி சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே போல பொதுவாக நிதி நிலையை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் பண்ட் டிராக்கிங் சிஸ்டத்தை கடைப்பிடித்து வருகிறோம். பல திட்டங்களுக்கு நாம் பணம் ஒதுக்கி இருக்கிறோம்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித்ஷாவை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினோம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. "பெயர் வச்சீங்க சோறு வச்சீங்களா.. அதற்காக பத்து பைசா பணம் வந்ததா.. இதுவரை பணம் எதுவும் வரவில்லை. அவர்கள் கொடுக்கவில்லை ஆனால் மாண்பு மிகு முதல் அமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்திய பிறகுதான் இன்று பணம் கொடுத்திருக்கிறார்கள்.
2000 கி.மீட்டருக்கு பெரிய அளவில் திட்டம் கொண்டு வந்தோம் என்று சொன்னீர்கள் பணம் வரவில்லையே.. உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால் நம்முறைய அரசு 26000 கோடி ரூபாய் மாநிலத்தின் சொந்த நிதியில் இருந்து செலவு செய்திருக்கிறது என்றார்.

டாபிக்ஸ்