Savukku Shankar: ‘நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்’ நடந்தது என்ன?
நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.
![Savukku Shankar: ‘நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்’ நடந்தது என்ன? Savukku Shankar: ‘நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்’ நடந்தது என்ன?](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/20/550x309/Savukku_Dec_20_1734681761018_1734681769364.jpg)
யூடியுபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் தரப்பில் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஜாமின் கோரிய விசாரணையில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவிப்பு.
சவுக்கு சங்கர் வழக்கு விபரம்
பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதனிடையே பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த சவுக்குசங்கர் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையானது நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து சென்னை விரைந்து சென்ற தேனி பிசி பட்டி காவல்துறையினர் தேனிக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் நேற்று முன் தினம் சவுங்கு சங்கரை, தேனி PC பட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர்.
சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு
அப்போது சவுக்குசங்கர் தரப்பில் பிடியாணையை ரத்துசெய்ய கோரிய மனுவை ஏற்க மறுத்து, டிசம்பர் 20 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.
இன்று ஜாமின் கிடைக்குமா?
இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சங்கருக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்று மாலை தெரியவரும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்