Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2024 11:43 AM IST

Savukku Shankar: "சவுக்கு சங்கர் மீது டி.வி.ஏ.சி வழக்குப்பதிவு செய்யலாம். சவுக்கு சங்கர் தனது நெருங்கிய 'நண்பர்கள்' பெயரில் வாங்கிய பினாமி சொத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை DVAC பதிவு செய்யலாம்

சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!
சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு

கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். இதையடுத்து சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கணினி சார் குற்ற பிரிவு காவல் துறையினர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்ற போது நீதிபதி ஜெயபிரதா ஒரு நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி உத்தரவு வழங்கினார். 

நேற்று முன்தினம் மாலை 4 மணியிலிருந்து நேற்று மாலை 4 மணி வரை அவருக்கு போலீஸ் காவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விசாரணை துவக்க வேண்டும். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் மருத்துவர் பரிசோதனை செய்து ஆஜர் படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்து நீதிபதி ஜெயப்பிரதா முன் ஆஜர்ப்படுத்தப்படுத்திய போது சவுக்கு சங்கர் உங்களை எதுவும் டார்ச்சர் செய்தார்களா காவல்துறை விசாரணையில் என்று கேட்ட பொழுது இல்லை என பதில் அளித்தார்.

தன்னை கோவை சிறையில் தனி அறையில் வைத்துள்ளதாகவும் அதில் இருந்தால் மன நோயாளியாகி விடுவேன் என நீதிபதியிடம் முறையிட்டார். திருச்சி சிறையில் தன்னை அடைக்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார் ஏன் என்று நீதிபதி கேள்வி

எழுப்பிய பொழுது போதை பழக்கத்தில் உள்ள சிறைவாசிகளுடன் மனம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடனும் அடைத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். சங்கரின் வேண்டுகோள் மனுவை நீதிபதி கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து 28.05. 2024 ம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பித்தார். கோயம்புத்தூர் சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

இதற்கிடையில் இது குறித்து பத்திரிகையாளர் செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சவுக்கு சங்கர் மீது டி.வி.ஏ.சி வழக்குப்பதிவு செய்யலாம். சவுக்கு சங்கர் தனது நெருங்கிய 'நண்பர்கள்' பெயரில் வாங்கிய பினாமி சொத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  பணியில் இருந்து இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை DVAC பதிவு செய்யலாம்.

டி.வி.ஏ.சி அதிகாரிகளின் கூற்றுப்படி, எந்தவொரு அரசு ஊழியரும் ஓய்வு அல்லது பணியில் இருந்து வி.ஆர்.எஸ் பெற்று 5 ஆண்டுகளில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் வழக்கு பதிவு செய்யப்படலாம். சவுக்கு சங்கர் மீது டி.வி.ஏ.சி., வழக்கு பதிவு செய்தால், சட்டவிரோத பணப் பரிமாற்றம் இருப்பதால் அந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படலாம்." என கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.