’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!

’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!

Kathiravan V HT Tamil
Published May 12, 2025 05:17 PM IST

"பாமக தனித்து போட்டியிட முடியாது என்பதை உணர்ந்து, தங்கள் செல்வாக்கை காட்ட இந்த மாநாட்டை நடத்தியது"

’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!
’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தேர்தலை முன்னிட்டு திருவிடந்தையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு, பாமகவின் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கும், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வலு சேர்ப்பதற்கும் நடத்தப்படுவதாக யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் நோக்கம்

திருவிடந்தையில் நடந்த இந்த மாநாடு, பாமகவின் அரசியல் பலத்தை இரு திராவிட கட்சிகளுக்கு எடுத்துக்காட்டுவதற்காகவும், 2026 தேர்தலுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. "பாமக தனித்து போட்டியிட முடியாது என்பதை உணர்ந்து, தங்கள் செல்வாக்கை காட்ட இந்த மாநாட்டை நடத்தியது," என்று சவுக்கு சங்கர் கூறினார்.  

அன்புமணியின் தலைமை மீதான விமர்சனம்

அன்புமணி ராமதாஸின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்த சவுக்கு சங்கர், "அன்புமணி ஒரு பக்குவமான தலைவராக உருவாகவே மாட்டார். அவருக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வெறி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்துவது அவரது அரசியல் பக்குவமின்மையை காட்டுகிறது," என்றார். மேலும், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை குறைவாக இருப்பதாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை

வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக திராவிட மாப்பிள்ளை உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைமை முடிவுகளை தானே எடுப்பது என முடிவு செய்ததாகவும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். "பாமகவின் அரசியல் செல்வாக்கை காட்டுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இல்லையெனில், திமுக அல்லது அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைக்காமல் போய்விடும்," என்று அவர் தெரிவித்தார்.

10.5% இட ஒதுக்கீடு மற்றும் சமூக பதற்றம்

பாமகவின் 10.5% இட ஒதுக்கீடு கோரிக்கையை விமர்சித்த சவுக்கு சங்கர், இது பிற சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறினார். "108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு உள்ள நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5% ஒதுக்குவது நியாயமற்றது. இதற்கு தரவு தேவை. உச்சநீதிமன்றமும் இதற்கு தரவு இல்லை என்று கூறி இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது," என்று அவர் விளக்கினார். இந்த கோரிக்கை 2021 தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்கு இடையூறு

மாநாட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து பேசிய சவுக்கு சங்கர், "மரக்காணம், கடலூர், புதுவை செல்ல வேண்டியவர்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பாமக தொண்டர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் இருக்க அன்புமணி அறிவுறுத்த வேண்டும்," என்றார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டி தொடரப்பட்ட வழக்கில், பாமகவிற்கும் வன்னியர் சங்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டதை சவுக்கு சங்கர் கேலி செய்தார்.