VarunKumar IPS vs Seeman: ’யார் அந்த தொழிலதிபர்? சொல்ல முடியுமா?’ வருண் குமாருக்கு சாட்டை துரைமுருகன் கேள்வி
VarunKumar IPS vs Seeman: 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்? என நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
வழக்கு தொடர்ந்த வருண்குமார்
தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி எஸ் பி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீமான் மீதான வழக்கில் ஆஜர்
அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எஸ் பி வருண்குமார் இன்று குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும், தன்னுடைய கடமையை செய்ததற்காக, தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவெளியிலும் என் குறித்து பேசினார், குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது தொடர்பான கருத்துக்களை வரண்குமார் தெரிவித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.