தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sattai Durai Murugan Alleges Dmk's Defamatory Tactics Using Ai On Ntk Leader Seeman

Seeman: ’AI சர்ச்சை! கருணாநிதி குடும்பம் குறித்து சீமான் பேசும் ஆபாச ஆடியோ?’ சாட்டை துரைமுருகன் விளக்கம்!

Kathiravan V HT Tamil
Jan 14, 2024 12:34 PM IST

“இந்த ஆடியோவை சுட்டிக்காட்டி திமுகவினர் மற்றும் பெரியார் இயக்கங்களின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சி மீதும் சீமான் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் சாட்டை துரைமுருகனிடம் சீமான் பேசும் ஆடியோ ஒன்றும் வைரல் ஆகி வருகிறது”

சீமான் - சாட்டை துரைமுருகன்
சீமான் - சாட்டை துரைமுருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆடியோவை சுட்டிக்காட்டி திமுகவினர் மற்றும் பெரியார் இயக்கங்களின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சி மீதும் சீமான் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் சாட்டை துரைமுருகனிடம் சீமான் பேசும் ஆடியோ ஒன்றும் வைரல் ஆகி வருகிறது.

அந்த ஆடியோவில், “என்னத்தையாவது பேசி வைக்குற, உன்னால பெரும் இடையூறா இருக்குது. உனக்கு கட்சி வேணும், அண்ணன் வேணும்னா நான் சொல்றததான் கேட்கணும். இல்லை என்றால் கட்சியில் இருந்து விளகிடு, நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்துனு சொன்னா ஒன்னும் பிரச்னை இல்லை. திருமாவளவனை விமர்சிக்கிறது நம்ம கோட்பாடு இல்ல. உனக்காக அண்ணன் ரொம்ப சகிச்சிட்டேன்” என சீமான் பேசி உள்ளார்.

இந்த இரண்டு ஆடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், சாட்டை துரைமுருகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளா அதில், ”அண்ணன் சீமான் பேசுவது போல் வெளியான ஆடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை திமுக அர்ப்பத்தனமாக பயன்படுத்து அவதூறு செய்து வருகிறது” என கூறி உள்ளார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கும் படி நாம் தமிழர் கட்சியினர் சீமான் பேசுவது போல் உருவாக்கி உள்ள ஏ.ஐ ஆடியோவையும் சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்