தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sathankulam Custodial Deaths: Police Throws Father And Son Blood Stained Dresses In Garbage

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2022 01:35 PM IST

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில், வழக்கு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக 2 சாட்சிகளுகம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா, கோவில்பட்ட சிறையில் இருந்த கைதி ராஜா சிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த 400 பக்க குற்ற பத்திரிகையால் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் விவரம்:

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் ஜூன் 19, 2020இல் சாத்தான்குளம் காமராஜர் பஜார் பகுதியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சட்டவிரோதமாக காவல்நிலையம் அழைத்து சென்று, அங்கு அவர்களை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். அதில் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பின் தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் தாக்கியதில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் உடல்களில் இருந்து ரத்தம் வந்து காவல் நிலைய சுவர்கள், தரை, அங்கிருந்த பொருள்களில் தெறித்துள்ளது.

இதனால் படுகாயம் ஏற்பட்டு அவர்கள் வலியால் அவதிப்பட்டபோதிலும் அங்கிருந்த ரத்த கரைகளை சுத்தப்படுத்துமாறு போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கு எதிராக பொதுவான நோக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். பின் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தும்போது ரத்தகறைகள் இருக்ககூடாது என கருதி அவர்களின் உடைகளை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றியுள்ளனர்.

தந்தை, மகனின் ரத்த படிந்த துணிகளை போலீசார் குப்பை தொட்டியில் வீசியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், தந்தை-மகன் ஆகியோரை தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

எனவே இந்த வழக்கில் கைதாகியுள்ள காவலர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் காவல்நிலையத்தில் வைத்து தந்தை-மகன் ஆகிய இருவரையும் துன்புறுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது.

காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோர் இறந்த ஜெயராஜ்-பென்னிக்ஸை சிறையில் அடைக்கும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்