தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sankara Linganar Memorial Day, Who Sacrificed His Life For The Name Of 'Tamil Nadu'

Sankaralinganar: ‘தமிழ்நாடு’ பெயருக்காக உயிர் நீத்த சங்கர லிங்கனார் நினைவு தினம்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 13, 2023 06:10 AM IST

தியாகி சங்கர லிங்கனாருக்கு தமிழக அரசு சார்பில் கல்லூரி சாலையில் ரூ1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தை 18.6.2015ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தியாகி சங்கரலிங்கனார்
தியாகி சங்கரலிங்கனார்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

விருதுநகர் அருகில் உள்ள சூலக்கரை மேடு என்ற கிராமத்தில் கருப்பசாமி வள்ளியம்மை தம்பதிக்கு 26.1.1895ல் மகனாக பிறந்தார் சங்கர லிங்கனார். இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

போராட்டம்

வ.உ.சிதம்பரனாரின் உரையால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் கொள்கைகள் அவரை ஆட்கொண்டது. கதர் அணிதல் ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஆர்வம் காட்டினார்.

சத்தியா கிரக போராட்டத்தில் பங்கேற்றதால் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

விருதுநகரில் இருந்த சொத்துக்களை விற்று பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். ஒரு துறவியை போல் தனது வாழ்வை அமைத்து கொண்டார்.

சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, கேரளா காங்கிரஸ் கமிட்டி என்று மொழிவாரி மாநிலம் அமைவதற்கு முன்பே கமிட்டிகள் இருந்தது. சுதந்திரம் அமைந்ததற்கு பின்னர் மொழி வாரி மாநிலங்கள் அமைக்க கோரி தன்னெழுச்சியாக போராட்டங்கள் எழுந்தன.

உண்ணாவிரதம்

கேரளாவிற்கு பிறகு 1952ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவை தனியாக பிரிக்க கோரி பொட்டி ஸ்ரீராமலு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய அரசு அதை கண்டு கொள்ளாதது தெலுங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆந்திரா சென்னை மாகாணத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது.

கேரளாவும் ஆந்திராவும் பிரிந்த போது எல்லை பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆந்திரா கேரளா பிரிக்கப்பட்ட பின் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் விரும்பினர். அப்போது பொட்டி ஸ்ரீராமலு வின் உண்ணா விரதம் சங்கரலிங்கனார் மனதில் ஒரு நம்பிக்கையை ஊட்டியது.

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தார். இதைத்தொடர்ந்து 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பின்னர் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த அவர் 76 ஆவது நாளில் உயிர் துறந்தார்.

தியாகி சங்கர லிங்கனாருக்கு தமிழக அரசு சார்பில் கல்லூரி சாலையில் ரூ1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தை 18.6.2015ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தியாகி சங்கர லிங்கனாரின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்