Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சாங் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அன்று ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்த நிலையில், அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு நடந்து கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
ஊழியர்களுக்கு வேறு பணிகள்
இந்த நிலையில் போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாளான ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்ட பணிகளுக்கு மாற்றாக வேறு பிரிவுகளில் பணி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன. மேலும் சிஐடியூ தொழிலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோருக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து உள்ளதாகவும் புகார் எழுந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று தொழிற்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் நடத்த உள்ளனர்.
ஊழியர்களை மிரட்டும் நிறுவனம்
இது குறித்து பேசிய சிஐடியூ செயலர் முத்துக்குமார், “போராட்டத்தில் ஈடுபட உள்ள தொழிலாளர்களை நேரடியாக மிரட்டும் நடவடிக்கைகளில் சாம்சாங் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வேலை செய்த பிரிவில் பணி செய்யவிடாமல், வேறு பிரிவுக்கு மாற்றுவது, மிரட்டல் விடுத்ததாக நோட்டீஸ் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.” என கூறி உள்ளார்.
ஊழியர்கள் நலனே முக்கியம்
இந்நிலையில், சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், "எங்கள் சென்னை தொழிற்சாலையில் நேற்று ஒரு தொழிலாளி சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம்.
சாம்சங்கில், எங்கள் தொழிலாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நிறுவனம் எந்தக் குழுவிலும் சேர ஊழியர்களுக்கு எந்த விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை, மேலும் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முரணாகக்கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் உண்மையல்ல." என விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்