Tamil News  /  Tamilnadu  /  Sadhuragiri Sundaramahalingam Temple Darshan Permission From Tomorrow

Sadhuragiri temple: சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி!

சதுரகிரி சித்தர் பீட சுந்தரமகாலிங்கம் கோயில்.
சதுரகிரி சித்தர் பீட சுந்தரமகாலிங்கம் கோயில்.

சதுரகிரி சித்தர் பீட சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில். இங்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பெளர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.23) பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை (செப்.26) மகாளய அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்