Tamil News  /  Tamilnadu  /  Sadhuragiri Sundaramahalingam Temple Darshan Permission From Today
சதுரகிரி சித்தர் பீட சுந்தரமகாலிங்கம் கோயில்.
சதுரகிரி சித்தர் பீட சுந்தரமகாலிங்கம் கோயில்.

Sadhuragiri temple:மகாளய அமாவாசை - சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி

23 September 2022, 12:57 ISTKarthikeyan S
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 12:57 IST

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு இன்று (செப்.23) முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பெளர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இன்று (செப்.23) பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை (செப்.26) மகாளய அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலையேறி நேராக கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • Share on Twitter
  • Share on FaceBook