தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sadhguru: Amazing German Singer Who Sang Sadhguru Jaggi Vasudev's Favorite Song!

Sadhguru: சத்குரு ஜக்கி வாசுதேவின் விருப்பப் பாடலை பாடி அசத்திய ஜெர்மன் பாடகி!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 02, 2024 08:58 AM IST

“நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என குறிப்பிட்டிருந்தார்.

சத்குரு ஜக்கி வாசுதேவின் விருப்பப் பாடலை பாடிய அசத்திய ஜெர்மன் பாடகி!
சத்குரு ஜக்கி வாசுதேவின் விருப்பப் பாடலை பாடிய அசத்திய ஜெர்மன் பாடகி!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். இவர் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலானஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. அவர் இந்திய கர்நாடக இசை மீது ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் தற்போது இந்தியாவிற்கு முதல் முறையாக வந்துள்ளார். இந்தியா வந்த கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேரில் சென்றார். அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் “நிர்வாண ஷடகத்தை” சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.

இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு “நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்”என பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு, “வாவ்! நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்” என பதில் பதிவு இட்டுள்ளார் காசண்ட்ரா.

அதுமட்டுமின்றி, ஈஷா யோக மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதோடு, சுற்றுச்சுழல் சார்ந்தும்,சமூக செயல்பாடுகள் சார்ந்தும் ஈஷா அறக்கட்டளை செய்து வரும் பங்களிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, “நான் ஜெர்மனி திரும்பி செல்கையில்,இந்தியாவின் அனைத்து நினைவு தடங்களையும் என்னுள் வைத்துக் கொள்வேன். அதை கொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 27 இந்திய பிரதமர் மோடி கோவையில் நடந்த என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போதும் பிரதமர் மோடியை ஜெர்மன் கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் சந்திதார். பிரதமரிடம் அண்ணாமலையானே உந்தன் அன்பில் கலந்தோமே"என்ற பாடலை பிரதமர் மோடி முன்பு பாடி காட்டினார். இவரது பாடலை கேட்டு பிரதமர் உற்சாகமாக கைதட்டி ரசித்து கேட்டார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்