ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்.. சிக்கிய 2 காரும் அதிமுகவினருடையது.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக் பேச்சு
ECR: ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

ECR: ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
ஈ.சி.ஆர் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு, அதிமுகவைச் சார்ந்தவர் என்றும்; அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், மற்றொரு கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் உறவினரின் கார் ஆகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். இதன்மூலம், ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது எனத்தெரிவித்தார், ஆர்.எஸ்.பாரதி.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது, ‘’ தமிழ்நாட்டில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்புபடுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயன்றுவருகிறார். இது இன்று வெட்டவெளிச்சமாக வெளியே வந்துவிட்டது. ஆனால், அவர் குற்றம்சாட்டிய பல விசயங்களில் அதிமுகவினரே தொடர்புகொண்டுள்ளனர்.
