‘தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில்.. வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பும் புலம்பல் சாமி’ ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
‘தமிழ்நாட்டின் மனசாட்சியை உறைய வைத்துப் பொள்ளாட்சி கொடூரம்! பேராசிரியரே மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் பார்த்த நிர்மலாதேவி விவகாரம்! சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்! இவ்வாறு பட்டியிட ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது’

‘தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில்.. வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பும் புலம்பல் சாமி’ ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
‘‘தூத்துக்குடி தூப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட பழனிசாமியின் அடிமை ஆட்சி அல்ல இது! சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை,’’ என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! ரூ.10,160.63 கோடியில் 662 கோடி முறை பயணம் பெண்கள் விடியல் பயணம்! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.721 கோடி வழங்கப்பட்டு 4,83,000 கல்லூரி மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்!
