IT Raid: ஜெகத்ரட்சகன் வீட்டில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல் - வருமான வரித்துறை தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  It Raid: ஜெகத்ரட்சகன் வீட்டில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல் - வருமான வரித்துறை தகவல்!

IT Raid: ஜெகத்ரட்சகன் வீட்டில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல் - வருமான வரித்துறை தகவல்!

Divya Sekar HT Tamil
Oct 19, 2023 12:23 PM IST

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் ரொக்கம், 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் வருமான வரி சோதனை நடக்கும்போதே, அமலாக்கத் துறை அதிகாரிகளும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினர்.

பல இடங்களில் சோதனை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிலையங்கள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித் துறையினரின் சோதனை நடந்தது.

வருமான வரித் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கல்வி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல், தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்னொரு தேடுதலில் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை ஈர்ப்பதற்காக ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை சுமார் ரூ.25 கோடி வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிக்கப்பட்டுள்ளன.

மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைக வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் ரொக்கம், 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.