தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /   <Span Class='webrupee'>₹</span>2 Crore Assets Of Deceased Avadi Old Lady Handed Over To The Government!

Avadi: உயிரிழந்த ஆவடி மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 18, 2023 08:57 AM IST

நேற்று மாலை தாசில் தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவடி சப் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் பிரேமா மற்றும் போலீசார் சுந்தரிபாயின் நகைகளை ஒப்படைத்தனர்.

மூதாட்டியின் நகைகள்
மூதாட்டியின் நகைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆவடி காமராஜர் நகர் மகிழம்பூ தெருவில் சுந்தரி பாய் (வயது 54) என்பவர் வசித்து வந்தவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அவரது வீட்டுக்குள் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த சுந்தரி பாய் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த சுந்தரி பாய்க்கு ஜானகி என்ற தங்கை இருந்தது தெரிய வந்தது. ஆனால் ஜானகியும் அதே மாதம் 14ம்தேதி உயிரிழந்திருந்தார். சகோதரிகளான ஜானகி மற்றும் சுந்தரிபாய் இருவரும் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையல் இருவரும் இறந்து விட்டதால் அவரது வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அங்கிருந்த பெட்டி ஒன்றை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 54 பவுண் நகை மற்றும் ரூ61 லட்சம் பணம் மற்றும் வீட்டின் பாத்திரங்கள் வங்கி புத்தகம் உள்ளிட்டவை இருந்துள்ளது.

இதையடுத்து உயிரிழந்த சுந்தரி பாய்க்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் அவருடைய சொத்துக்களை வருவாய் துறையினர் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தாசில் தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவடி சப் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் பிரேமா மற்றும் போலீசார் சுந்தரிபாயின் நகைகளை ஒப்படைத்தனர்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த நகை மற்றும் பணத்தை ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வாரிசு இல்லாத சுந்தரிபாய்யின் சொத்துகள் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் இன்ஸ்டியூட் வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு சுந்தரி பாய்யின் சொத்துக்கள் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்