R.N.Ravi : ஆளுநர் குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னது உண்மையா? ஆளுநர் மாளிகை அறித்த விளக்கம் இதோ!
R.N.Ravi : தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள் தான் என்றும் சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ நாட்டார் தெய்வம் மற்றும் கிராம கோயில் விழாக்களை தடை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ரவி கூறியதாக பொய்யான செய்தி பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
R.N.Ravi : தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வரும் குலதெய்வ வழிபாட்டை ஆளுநர் விமர்சித்து பேசியதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அதற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குல தெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும். தமிழக மக்களை குலதெய்வங்கள் தான் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதாக ஆளுநர் ஆர் எம் ரவி பேசியதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகின.
இதனால் தமிழகத்தில் சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வ வழிபாடு மற்றும் கிராம கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர். என்.ரவி கூறியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கம்
கள்ளச்சாராய விவகாரத்தில் இது போன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறைத்துள்ளது. தவறான நோக்கங்களுக்காக பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்கள் தவறான வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அறித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, " தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள் தான் என்றும் சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வம், நாட்டார் தெய்வம் மற்றும் கிராம கோயில் விழாக்களை தடை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ரவி கூறியதாக பொய்யான செய்தி பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை பரப்பி மக்களை தவறாக வழி நடத்துவது கடும் கண்டனத்திற்கு உரியது என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. இது மாநிலத்தில் உயர் பதவியில் இருப்பவர்களின் மதிப்பை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய விரிவான விசாரணை நடத்தி பொய்யான செய்தியை பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மதியம் 12 மணியளவில் படி 58 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 156 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செய்தி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக!
முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை இன்று புறக்கணித்து உள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்திலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து இருந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டியதுடன், சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்