தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Revenue Minister Kkssr Ramachandran's Response In The Legislative Assembly Regarding The Creation Of Separate Constituencies Including Arani And Kumbakonam.

ஆரணி உள்ளிட்ட 8 புதிய மாவட்டங்கள்! பிரிப்பது எப்போது? KKSSR பேரவையில் சொன்ன பதில்

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 11:09 AM IST

ஆரணி மற்றும் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டங்களை அமைக்க ஆரணி அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன், திருவிடைமருதூர் திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன் கோரிக்கை

ஆரணி - கும்பகோணம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
ஆரணி - கும்பகோணம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய 3 கோட்டங்களும், 12 வட்டங்களும் உள்ளது. 18 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 ஊராட்சிகளை கொண்டுள்ளது. வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, போளூர் வட்டங்களை உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்குவதின் மூலம் மக்கள் பயன்பெருவார்கள், இதில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அளவுகோளின்படி ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சாத்தியக்கூறுகள் இல்லை.

8 மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று சொல்லி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு எடுப்பார்கள். ஆனால் சட்டப்படி பிரிப்பதற்குரிய தகுதிகள் இல்லாமல் உள்ளது என்றார்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. வருவாய் அதிகம் உள்ள பகுதியான இது பரிசீலிக்கப்படுமா என்று கேட்க விரும்புகிறேன் என திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி.செழியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 8 மாவட்டங்கள் பிரிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் என்றுதான் சொன்னேன். இவை அரசின் பரிசீலனையில் உள்ளது நிதிநிலை சூழலுக்கேற்ப முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆரணி, கும்பகோணம், பழனி, பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point