Republic Day 2023 : சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக்கொடி!
152 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி
தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு தினத்தையொட்டி இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலையத்தை பொறுத்த வரை சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.
இந்த கோயில் ஒரே தருணத்தில் கட்டப்படாமல் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பாடல்கள் ராஜ ராஜ சோழன் காலத்தில் மீட்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்டு.
இந்நிலையில் இந்திய நாட்டின் 74 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் கோயிலில் தேசியக்கொடி ஏற்பட்டப்பட்டுள்ளது.
இன்று காலை தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து சாமி முன் தீட்சிதர்கள் படைத்தனர். பின்னர் மேல தாளம் முழங்க தேசிய கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 152 அடி உயரம் உள்ள கிழக்கு சன்னதி கோபுரத்தில் தேசியக்கொடியை தீட்சிதர்கள் ஏற்றினர். கடந்த சில ஆண்டுகளாக சிதம்பரம் கோயிலில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை மரபாக கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் கோயிலில் தேசியக்கொடி ஏற்றும் நடைமுறை என்பது சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்