தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Lpg Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

Divya Sekar HT Tamil
May 01, 2024 07:38 AM IST

LPG Cylinders Price : 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1911க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்
வணிக பயன்பாட்டு சிலிண்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், தற்போது மே மாதத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு இன்று (மே 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதேசமயம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கான விகிதங்கள் அதிகரித்தபோது எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்ட முந்தைய அறிவிப்பைத் தொடர்ந்து சிலிண்டர்களின் விலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. 

ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகியவை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சமையல் எரிவாயு விலையை மாற்றியமைக்கின்றன. இது போன்ற ஏற்ற இறக்கங்கள் பொதுவாக எரிபொருள் செலவுகள் மற்றும் சந்தை இயக்கவியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இண்டேன் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நுகர்வோர் கண்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொடர்ந்து இரண்டு முறை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 2024 புத்தாண்டுக்கு முன்னதாக 19 கிலோ வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.39.50 குறைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.23.50 உயர்ந்து ரூ.1960-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் உணவு விடுதி, பேக்கரி, டீ கடை உள்ளிட்ட தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோன்று வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்