’ஊர்ந்து தவழ்ந்த ஸ்டாலின்! கொத்தடிமை நேரு!’ விளாசும் ஆர்.பி.உதயகுமார்!
”இனி பல கட்சிகள் கூட்டணியில் சேர போகின்றது என்று எடப்பாடியார் சொன்னதும் ஸ்டாலின் வயிற்றில் புளிக்கரைத்து ஊற்றியிருக்கிறது”

தன் அப்பா மடியில் ஊர்ந்து ,தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியின்றி தனது அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை, திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையை தகர்த்து எரிந்து வருகிறது அஇஅதிமுக தலைமையான கூட்டணி.
இனி பல கட்சிகள் கூட்டணியில் சேர போகின்றது என்று எடப்பாடியார் சொன்னதும் ஸ்டாலின் வயிற்றில் புளிக்கரைத்து ஊற்றியிருக்கிறது, வாக்குறுதிகளை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின்? நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ஒன்று இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்? நான்காண்டுகள் நன்றாக பெஞ்சு தேய்த்தீர்கள் நீட் தேர்வு போனதா? நேற்று முன்தினம் திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 வது முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன, இதற்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார் நேரு அவர்களே?