Tamil News  /  Tamilnadu  /  Rare Green Colour Coment To Mark Close Approach To Earth And Can See From Nakd Eyes Tonight
பூமி சுற்றுப்பாதையை நோக்கி வரும் பச்சை நிற வால்நட்சத்திரம்
பூமி சுற்றுப்பாதையை நோக்கி வரும் பச்சை நிற வால்நட்சத்திரம்

Green Comet: 50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமி பாதையில் பச்சை நிற வால் நட்சத்திரம்

30 January 2023, 17:55 ISTMuthu Vinayagam Kosalairaman
30 January 2023, 17:55 IST

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று பூமியின் சுற்றுப்பாதையில் வரும் அதிசய நிகழ்வு இன்று இரவு முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நிகழ்கிறது.

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக வால் நட்சத்திரங்கள் தோன்றுவது உள்ளது. பொதுவாக வால் நட்சத்திரங்கள் நீள் வட்ட பாதையில் பயணிப்பதால் அவை சூரியனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கடந்து செல்லும். அப்போது அவை பூமியில் மனிதர்களின் கண்களுக்கு புலப்படும். இதுவரை 6500க்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு மிக அருகில் C2022e3 ZTF என்ற மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. அமெரிக்காவில் உள்ள வானியல் ஆய்வு மையத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. இது தற்போது சூரியனை கடந்து வந்து கொண்டிருக்கிறது.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்ல இருக்கிறது. ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் பூமிக்கு மிக அருகில், அதாவது கிட்டத்தட்ட 4 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பூமியை இந்த வால் நட்சத்திரம் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை நெருங்கும் போது விநாடிக்கு சுமார் 57 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை மாலை நேரத்தில் வடக்கு திசையில் சூரியனின் மறைவுக்கு பிறகு பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை கடந்து செல்லும்போது இரவில் வெறும் கண்களாலும், தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியும். அதிக பிரகாசமாக இருந்தால் தெளிவாகவே வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரம் தோன்ற இருக்கும் தேதிகளில் கொடைக்கானலில் மேக மூட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், கொடைக்கானலில் இருந்து பார்க்க முடியாது எனவும் தொலைநோக்கிகள் மூலம் வால் நட்சத்திரத்தின் நகர்வுகளை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வால்நட்சத்திரம் குறித்து கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் தலைமை விஞ்ஞானி டாக்டர் எபினேசர் கூறியதாவது: "50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் இந்த பச்சை நிற வால்நட்சத்திரம் மிகவும் விசித்திரமானது. ஊட்ஸ் கிளவுட் என்கிற சூரிய குடும்பத்தை சேர்ந்ததாக உள்ளது. தற்போது கொடைக்கானனில் நிலவி வரும் மேகமூட்டம் காரணமாக இதை காண்பது கடினம். காவலூர் ஆராயச்சி மையத்தில் வைத்து இந்த வால் நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறு கண்களால் பார்க்க முடியும்" என்றார்.