தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Rank For Group 2 Non-interview Posts Will Be Released By April 2nd Week

Group 2 : குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தரவரிசை எப்போது வெளியாகும்? இதோ முழு விவரம்!

Divya Sekar HT Tamil
Mar 20, 2024 09:21 AM IST

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசையானது இறுதி கட்ட நேர்முகத் தேர்வு ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குரூப்-2 விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி II IIA பணிகள்) (தேர்வாணைய அறிவிக்கை எண்.03/2022 நாள் 23.022022) அடங்கிய பதவிகளுக்கான தெரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளிலுள்ள 161 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டு கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு சில இடஒதுக்கீட்டு பிரிவுகளில் (தொடர்பான தகவல்கள் தகுதியுள்ள தேர்வர்களுக்கு அனுப்பப்படும்) 29 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

எனவே, இறுதி கட்டமாக, இத்தெரிவிலுள்ள நேர்முகத் தேர்வுப் பதவிகளில் நிரப்பப்படாமல் உள்ள மேற்படி 29 காலிப்பணியிடங்கள் நிரப்பிட இறுதி கட்ட நேர்முகத் தேர்வினை தகுதியுள்ள தேர்வர்களைக் கொண்டு நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

எனவே, இத்தெரிவிலுள்ள நேர்முகத் தேர்வு பதவிகளில் நிரப்பப்படாமல் உள்ள 29 காலிப்பணியிடங்களுக்காக மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் தங்களது விருப்பத்தினைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 3 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தகுதியான தேர்வர்களுக்கு மேற்படி விருப்பம் தொடர்பான தகவல் அத்தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் மற்றும் அவர்கள் தங்களது விருப்பத்தினை ஒருமுறை பதிவு மூலம் தெரிவிக்கலாம்.

மேலும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசையானது இறுதி கட்ட நேர்முகத் தேர்வு ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதாவது  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.

நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. 6,151 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நேர்முகத் தேர்வு பதவிகளில் நிரப்பப்படாமல் உள்ள 29 காலிப்பணியிடங்களுக்காக மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் தங்களது விருப்பத்தினைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 3 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி தகுதியான தேர்வர்களுக்கு மேற்படி விருப்பம் தொடர்பான தகவல் அத்தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அவர்கள் தங்களது விருப்பத்தினை ஒருமுறை பதிவு மூலம் தெரிவிக்கலாம். மேலும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசையானது இறுதி கட்ட நேர்முகத் தேர்வு ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்