Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?

Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?

Kathiravan V HT Tamil
Published Feb 13, 2025 04:04 PM IST

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?
Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?

பதவி காலியாகும் எம்பிக்கள் யார்?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் அதிமுக ஆதரவுடன் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

திமுகவில் யாருக்கு வாய்ப்பு?

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

திமுகவை பொறுத்தவரை மாநிலங்களவையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வலுவான வாதங்களை முன் வைத்து வரும் வில்சனுக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளரான எம்.எம்.அப்துல்லாவுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுசவுக்கு ஒரு ராஜ்ஜியசபா உறுப்பினர் பதவி வழங்குவது அக்கட்சியில் வழக்கமாக உள்ளது. தொமுசவை சேர்ந்த சண்முகம் அல்லது நடராஜன் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவருக்கு ராஜ்ஜியசபா எம்பி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்?

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அக்கட்சிக்கு ஒரு ராஜ்ஜியசபா எம்பி இடம் வழங்கப்படும் என ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எம்பி பதவியை தர திமுக முன் வந்து உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனை நேற்றைய தினம் அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். இன்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக பேசியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு?

அதிமுகவை பொறுத்தவரை ஒரு ராஜ்ஜியசபா எம்பி பதவியை தேமுதிகவுக்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தேமுதிகவின் விஜய பிரபாகரன் எம்பி ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு எம்பி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வைகோவின் நிலை என்ன?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது, வைகோ திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்பி ஆனார். ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு திருச்சி மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. துரை வைகோ போட்டியிட்டு எம்பி ஆனார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து ஒப்பந்தம் போடவில்லை. அது குறித்து கேட்கவும் இல்லை’  என தெரிவித்தார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.