Tamil News  /  Tamilnadu  /  Rajinikanth Talks About Making Annamalai Chief Minister - Journalist S. Gurumurthy At Thuglak Magazine's Anniversary

Annamalai: ’அண்ணாமலைதான் CM!’ ரஜினி ரகசியத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி!

Kathiravan V HT Tamil
Jan 15, 2024 08:19 AM IST

”ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் அண்ணமலைக்கு உள்ளது. அரசியல் என்பது சவால் நிறைந்தது”

துக்ளக் விழாவில் பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் குருமூர்த்தி
துக்ளக் விழாவில் பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் குருமூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் விபூதியை அழிக்கத் தொடங்கிவிட்டார்.  எங்கேயே சொன்று முக்காடு போட்டுக்கொண்டு கூட்டம் பேசுவது துர்பாக்கியம். இரட்டை இலை அவர் கையில் உள்ளதுதான் இந்த பிரச்னைகள், அதற்கு மாற்று இல்லை. 

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக வர வேண்டும் என நினைத்தார். அப்போது அவர் என்னிடம் ’நான் முதலமைச்சராக வரமாட்டேன்’ என்று கூறினார். 

‘நீங்களே முதலமைச்சராக வரவில்லை என்றால் வேறு யார் வருவார்கள்?’ என நான் கேட்டேன் அப்போதுதான் அண்ணாமலை என்று ஒருவர் இருப்பதை பற்றி கூறினார். 

அண்ணாமலை குறித்து நான் பேப்பரில் கேள்விபட்டு இருந்தேன். பாஜக சித்தாந்தத்தால் அண்ணாமலை ஈர்க்கப்பட்டுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் அண்ணமலைக்கு உள்ளது. அரசியல் என்பது சவால் நிறைந்தது. வாழ்கையில் நிம்மதியாக இருந்த மனிதர், இன்று அதை ஓரம்போட்டுவிட்டு அரசியலில் உள்ளார். இன்று அண்ணாமலை பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். 

WhatsApp channel