’வடிவேலுக்கு வந்த கூட்டம் எவ்ளோ தெரியுமா?’ விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’வடிவேலுக்கு வந்த கூட்டம் எவ்ளோ தெரியுமா?’ விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!

’வடிவேலுக்கு வந்த கூட்டம் எவ்ளோ தெரியுமா?’ விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!

Kathiravan V HT Tamil
Published Apr 27, 2025 03:43 PM IST

”எம்.ஜி.ஆர் இளைஞர்களை அரசியலில் பக்குவப்படுத்தி, பொதுத்தொண்டு செய்ய வைத்தார். அதன் பின்னரே அவர் அரசியல் அரங்கில் பெருவெற்றி பெற்றார். எம்ஜிஆர் போல் வெற்றி பெறுவது மற்றவர்களுக்கு சாத்தியமில்லை”

’வடிவேலுக்கு வந்த கூட்ட எவ்ளோ தெரியுமா?’ விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!
’வடிவேலுக்கு வந்த கூட்ட எவ்ளோ தெரியுமா?’ விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சிவகாசிக்கு வந்தால் ஓரமாக நின்று அவரது பேச்சையும் செயல்பாடுகளையும் கவனிப்பேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயாராக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் இணைய முடியும் எனவும் அவர் கூறினார்.

விஜய் பேச்சும் வடிவேலு பரப்புரையும்!

ராஜேந்திர பாலாஜி, விஜய்யை ஒரு செல்வாக்கு மிக்க நடிகராகக் குறிப்பிட்டு, “சிவகாசிக்கு அவர் வந்தால், நானும் ஓரமாக நின்று அவரது பேச்சு, செயல்பாடுகள் எப்படி உள்ளன எனப் பார்ப்பேன். ஆனால், கூட்டத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது,” என்றார். 2011 தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சிவகாசியில் பிரச்சாரம் செய்தபோது கூடிய கூட்டத்தை கண்டு அரண்டு போனோம். அந்த தேர்தலில் 38 ஆயிரத்து 888 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தேன். நடிகர்களுக்காக கூட்டம் எம்ஜிஆர் காலத்துடன் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் வெற்றி மற்றவர்களுக்கு சாத்தியமில்லை 

எம்ஜிஆரின் அரசியல் வெற்றி தனித்துவமானது என விளக்கிய பாலாஜி, “எம்ஜிஆர் 1957 இல் அரசியலுக்கு வந்து, 1967 இல் சட்டமன்ற உறுப்பினராகி,  1977 இல் ஆட்சியைப் பிடித்து 1987-இல் மறைந்தார். 20 ஆண்டுகள் அரசியல் பயணத்தில், திரைப்படங்கள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தி, இளைஞர்களை அரசியலில் பக்குவப்படுத்தி, பொதுத்தொண்டு செய்ய வைத்தார். அதன் பின்னரே அவர் அரசியல் அரங்கில் பெருவெற்றி பெற்றார்,” என்றார். எம்ஜிஆர் போல் வெற்றி பெறுவது மற்றவர்களுக்கு சாத்தியமில்லை என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக எதிர்ப்பே முக்கிய குறிக்கோள்

திமுகவை எதிர்ப்பது தங்களின் ஒற்றை குறிக்கோள் எனக் கூறிய பாலாஜி, “திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் இணைய எடப்பாடியார் தயாராக உள்ளார். இது அதிமுக தொண்டர்களின் விருப்பமும் ஆகும்,” என்றார். திமுக எதிர்ப்பு கொள்கையுடன் செயல்படும் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் எண்ணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடு

விஜய்யின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய பாலாஜி, “விஜய் தனது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக போர்வீரர்களாக இருக்குமாறு கூறியுள்ளார். அது சரியான அணுகுமுறை,” என்றார். இருப்பினும், அதிமுகவைப் பொறுத்தவரை, தங்களது பூத் கமிட்டி நிர்வாகிகள் தளபதிகளை போன்றவர்கள்.  பல தேர்தல்களை சந்தித்து அனுபவம் பெற்றவர்கள் எனவும், திமுகவை தோற்கடிக்கும் வலிமை அதிமுகவுக்கு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.