Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது

’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
