Rain Alert: உருவாகும் புதிய புயல்! இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: உருவாகும் புதிய புயல்! இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

Rain Alert: உருவாகும் புதிய புயல்! இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Nov 29, 2023 10:35 AM IST

”இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”

வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெரும் பட்சத்தில் வடமேற்கு திசையில் இது நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடதமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே இன்று பிற்பகல் இரு மணி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (29-11-2023) பிற்பகல் 1 மணி வரை வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் உடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ள நிலையில், இன்றைய தினம் காலை 7 மணி முதல் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.