Rain Alert: ’மக்களே உஷார்!அடுத்த 3 நாட்களில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!’
”குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது”
அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்றைய தினம் (நவம்பர் 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (நவம்பர் 22) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (நவம்பர் 23) தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் அதிக மழையை பெறும்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது.