TN Rain Update: டிசம்பர் 3 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை! ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுபெறகூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகரந்து தென் மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இதுகுறித்து தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.
வானிலை முன் அறிவிப்பு
அடுத்த 5 நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் இரு நாள்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 2, 3 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடற்கரை பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்றும், நாளையும் 55 கிமீ வேகத்தில், தென் மேற்கு வங்ககடல் பகுதியில் டிசம்பர் 1ஆம் தேதி 50 முதல் 60 கிமீ வேகத்திலும், டிசம்பர் 2ஆம் தேதி 60 முதல் 70 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று இருக்ககூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் இன்று இரவுக்குள் கறைக்கு திரும்ப வேண்டும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளின் வட கடலோர மாவட்டங்களில் அநேக் இடங்களிலும், வட தமிழ்நாடு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 32 செமீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 அடி வரை மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன போக்குவர்தது ஸ்தம்பித்துள்ளது. சாலையில் தேங்கியிருக்கும் நீர் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்த்து செல்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9