Tamil News  /  Tamilnadu  /  Rain Alert For 13 Northern Districts Of Tamilnadu Today
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Rain alert in TN: வட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

24 November 2022, 8:37 ISTMuthu Vinayagam Kosalairaman
24 November 2022, 8:37 IST

தமிழகத்தில் வட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் வலுவிழந்த போதிலும் மழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்ட, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்