Rain Update: மேற்கு, தென் தமிழ்நாட்டை சேர்ந்த 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டை சேர்ந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளி மண்டல் சுழற்சி நிலவி வருகிறது.
இத் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல், மேற்கூறிய மாவட்டங்கள் உள்பட தென் தமிழ்நாட்டை சேர்ந்த மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தென் கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்து. இதையடுத்து தற்போது தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி வரை இருக்ககூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்