‘இந்த வாய்ங்கோ..’ தேர்தலுக்கு முன் அள்ளி வீசிய திட்டங்கள்.. புதுச்சேரி முதல்வரின் பட்ஜெட் அறிவிப்புகள்!
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றத்தினாளி மாணவர்கள் உதவித்தொகை ரூ.5000 லிருந்து ரூ.8000 ஆகவும், முதுநிலை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.6800 லிருந்து ரூ.9800 ஆக உயர்த்தி அறிவித்தார் ரங்கசாமி.

புதுச்சேரியில் இனி வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கப்படும் என்றும், அரசு இட ஒதுக்கீட்டில் உயர் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் ரூ 13 ஆயிரத்து 600 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் இதோ:
மாணவர்களுக்கான திட்டங்கள் அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் வாரம் 3 முட்டைகள் வழங்கப்படுகிறது. இனி வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் முட்டை வழங்கப்படும். 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துமிக்க பல்வேறு சிறுதானிய சிற்றுண்டி மாலை நேரங்களில் வாரத்திற்கு 2 பள்ளி நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் வழங்கப்படும்
சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் செவிலியர் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராசர் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மேலும், இளங்கலை நீட் பாடப்பிரிவுகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராசர் நிதி உதவித் திட்டத்தின்கீழ் 100 விழுக்காடு கட்டண விலக்கு அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு 100 விழுக்காடு கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
உதவித் தொகை உயர்த்தி அறிவிப்பு
- 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.4000 ஆக உயர்வு
- 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆக உயர்வு
- 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.3400 லிருந்து ரூ.6400 ஆகவும் உயர்வு
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றத்தினாளி மாணவர்கள் உதவித்தொகை ரூ.5000 லிருந்து ரூ.8000 ஆகவும், முதுநிலை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.6800 லிருந்து ரூ.9800 ஆக உயர்த்தி அறிவித்தார் ரங்கசாமி.
உதவித் தொகை அறிவிப்பு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் ஓய்வூதிய பெறும் அனைத்து பிரிவினருக்கும் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த வாடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலம் கருதி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3000 ரூபாயும், 11ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

டாபிக்ஸ்