புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!

புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 11:27 AM IST

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!
புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!

தேர்ச்சி விகிதம் விபரம்:

கடந்த 2025-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 7453 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3794 மாணவர்களும் 3659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தனியார் பள்ளி ஒட்டுமொத்த தேர்ச்சி 98.53 சதவீதம் ஆகும். பாலினம் ரீதியாக, மாணவர்களின் தேர்ச்சி 97.76 சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 99.35 சதவிகிதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

  • புதுச்சேரி, காரைக்கால் - 98.53%
  • புதுச்சேரி பகுதி - 98.57%
  • காரைக்கால் பகுதி - 98.12%

மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!

கூடுதல் விவரங்கள்:

  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை - 101
  • 2024-2025 ஆம் ஆண்டின் மொத்த தேர்ச்சி சதவிதம் - 98.53%
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 100 சதவிதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை - 63
  • புதுச்சேரியில் 100 சதவிதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை - 51
  • காரைக்காலில் 100 சதவிதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை - 12

மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: இங்கே உங்கள் ரிசல்ட் தெரிந்து கொள்ளலாம்!

தமிழ்நாடு ப்ளஸ் 2 ரிசல்ட்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.