தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Protests Against Babri Masjit Demolition In Tamilnadu

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடுமுழுவதும் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

I Jayachandran HT Tamil
Dec 06, 2022 09:09 PM IST

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 06 ஆம் தேதியை பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார்.

வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட தொகுதி முன்னணி அமைப்பினுடைய நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றி குமரன்,

மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், அ.தி.ம.மு.க தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

IPL_Entry_Point