Modi: பிரதமர் மோடியின் இன்றைய பயண திட்டம்.. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்!
இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 8. 40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ. உ. சி துறைமுகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி , நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமான தமிழகம் வந்தார். நேற்று கோவையில் நடந்த என் மண் என் மக்கள்யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்றார். பின்னர் மாலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சில் பங்கேற்ற பிரதமர் இரவு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்திந்தார். பின்னர் மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ள மோடி இன்று தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 8. 40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ. உ. சி துறைமுகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். அங்கிருந்து காரில் புறப்படும் மோடி அரசு விழாவில் பங்கே இருக்கிறார். இதை அடுத்து அங்கு பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு விழா மேடை தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் அப்பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இதில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூபாய் 7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ. 265.15 கோடி மதிப்பிலான வடக்கு சரக்கு தளம் 3 எந்திரம் மயமாக்கல், ரூபாய் 124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கம் ரூ.1477 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி நாகர்கோயில் இரட்டை ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். இதோபோல் நாடு முழுவதும் ரூபாய் 4,586 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் 17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவை முடித்த பிறகு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் நெல்லை புறப்படுகிறார். பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க உள்ளது. அங்கிருந்து குண்டு துறைக்காத காரில் புறப்படும் மோடி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
அதில் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி நெல்லை தூத்துக்குடியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பிரதமரை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினரின் சார்பில் கொடிக்கம்பங்கள் வரவேற்பு பேனர்கள் தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
