தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Prime Minister Modi Visit Devotees Suffer As Bus Service Is Stopped In Rameswaram

பிரதமர் மோடி வருகை.. ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி!

Divya Sekar HT Tamil
Jan 20, 2024 01:02 PM IST

ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை செல்லும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர்.

பிரதமர் மோடி வருகை
பிரதமர் மோடி வருகை

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் வெள்ளிக்கிழமை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார் . இதையடுத்து கார் மூலம் கோயிலுக்கு சென்றார். தற்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு பூர்ணம் மரியாதை கொடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கோயில் தாயார் மற்றும் பெருமாள் சன்னதியில் சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லவிருக்கிறார்.

இந்நிலையில்,ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை செல்லும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர்.

சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுமார் 3 கி.மீ தூரம் வரை பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்