தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Prime Minister Modi Sami Darshan At Srirangam Ranga Nadhar Temple

PM Modi : ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2024 12:16 PM IST

ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடி சாமி தரிசனம்
பிரதமர் மோடி சாமி தரிசனம்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் வெள்ளிக்கிழமை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார் . இதையடுத்து கார் மூலம் கோயிலுக்கு சென்றார். தற்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு பூர்ணம் மரியாதை கொடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கோவில் தாயார் மற்றும் பெருமாள் சன்னதியில் சென்று சாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து தமிழர்கள் பாடப்படும் கம்பராமாயணத்தை கேட்டு வருகிறார்.

சாமி தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லவிருக்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று வருகை தரவிருக்கும் நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமா் வருகையையொட்டி, திருச்சியில் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை பிரதமா் மோடி சென்னை வந்தாா். இதைத் தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ விளை யாட்டு போட்டிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். அதன்பின்னா் இரவு ஓய்வு எடுப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் சென்றாா். பிரதமரை ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்