TNGIM 2024: ’தமிழ்நாட்டில் முதலீடுகள் வர பிரதமர் மோடியே காரணம்!’ தமிழிசை பேட்டி!
”TNGIM 2024: ஒரு மாநிலத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் வருவது இல்லை. தமிழ்நாடு மட்டுமில்லாமல்; பல மாநிலங்கள் அந்நியமுதலீட்டை ஈர்க்கிறார்கள். இதில் பாரத பிரதமரின் பங்கு முக்கியமானது”
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. பிரதமர் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவு, பாரத தேசம் தொழில் முனைவோருக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டுக்கு தொழில் முனைவோர்கள் வருகிறார்கள். பாரத பிரதமர்மோடி ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று ஏற்படுத்திய நல்லெண்ணெமே முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு காரணம். இதற்கு முன் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வுளவு முதலீடுகள் வந்துள்ளது என்ற விவரம் கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் எல்லா பகுதிகளுக்கும் கிடைப்பது போல் வழி வகை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.
ஒரு நாட்டின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும், ஒரு மாநிலத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் வருவது இல்லை. தமிழ்நாடு மட்டுமில்லாமல்; பல மாநிலங்கள் அந்நியமுதலீட்டை ஈர்க்கிறார்கள். இதில் பாரத பிரதமரின் பங்கு முக்கியமானது.
சென்னைக்கு அருகே உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் அவ்வளவு பிரச்னை உள்ளது. அதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிடவில்லை என முரசொலி கூறுகிறது. ஆனால் முதலமைச்சரே சரியாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. வெள்ள பாதிப்புகளை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், எல்லா குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசின் மீது திமுக பழிப்போடுகிறது.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாம் கனவு கண்டு கொண்டிருந்த ராமர் கோயில் கிடைக்க போகிறது. இந்த விழாவுக்கு யாரை அழைக்க வேண்டும் என்பது அக்கோயிலை சேர்ந்த கமிட்டியை சேர்ந்தவர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவரை அழைத்தார்களா இல்லை; அழைக்கவில்லையா என்பதை அரசியலாக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
குடியரசுத் தலைவராக வரக்கூடாது நினைத்தவர்கள்தான் அவரை ராமர் கோயிலுக்கு அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் என தமிழிசை கூறினார்.