தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rameswaram: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி ராமநாத சுவாமியை தரிசித்த பிரதமர் மோடி

Rameswaram: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி ராமநாத சுவாமியை தரிசித்த பிரதமர் மோடி

Marimuthu M HT Tamil
Jan 20, 2024 04:29 PM IST

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி நீராடினார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி

வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.

பின் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது உடைமைகளை வைத்து, அக்னி தீர்த்த கடலில் குளிக்க சாலை மார்க்கமாக சென்றார். அங்கு அவருக்கு சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார். பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி சந்நிதானத்தில் அமர்ந்து மனம் உருகப் பிரார்த்தனை செய்தார்,பிரதமர் நரேந்திர மோடி. பின் சுற்றுப்பிரகாரத்தில் அமைதியாக வலம் வந்தார், பிரதமர் மோடி.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.