HBD MK Stalin: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் , நடிகர் ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதைத்தொடர்ந்து இன்று காலை தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்தினார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதைத்தொடர்ந்து இன்று காலை தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தந்தை கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றர். இதையடுத்து சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.
பிரதமர் வாழ்த்து
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நீண்ட ஆரோக்கியமான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில், "சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஜினி வாழ்த்து
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவரது ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது பதின்பருத்தில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கி அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்டோரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்துவது, மேடை நாடகங்களில் நடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இப்படி ஆரம்பித்த அரசியல் ஆர்வம்இன்று அவரை தமிழக முதல்வராக உயர்த்தி உள்ளது.
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 132 இடங்களை பிடித்து வெற்றி பெற்றதன் மூலம் திமுகவின் 10 ஆண்டுகால தொண்டர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கட்சியை அரியணை ஏற்றினார் .
உலகையே ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் பலரின் பாராட்டுகளை பெற்றது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மகளிர் இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், வேளான் நிதிநிலை அறிக்கை தாக்கல், இல்லம் தேடி கல்வி,நான் முதல்வன், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அவரின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் கவனிக்கப்பட்ட திட்டங்களாக உள்ளது.
காத்திருக்கும் சவால்கள்
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி 2024 நாடாளுமன்றம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களை சந்திப்பது ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளது.
